அக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு ?

அக்டோபர் மாதம்  முதல் வாரத்திலேயே வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் அசுரன் 4ம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 100% காதல் படமும் வெளியாகிறது.

இந்த இரண்டு நேரடித் தமிழ்ப் படங்களுடன் நாளை வெளியாகும்  மெகா ஸ்டார்  சிரஞ்சீவி நடிப்பில்  தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ள சைரா படம் வெளியாகிறது. சைரா டப்பிங் படமென்றாலும் பாகுபலி படத்திற்குப் பிறகு தெலுங்கிலிருந்து வரும் பிரம்மாண்டமான படம், , விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா என இன்றைய இளம் நட்சத்திரங்கள் என்பதால் இந்தப் படத்தைப் பார்க்கவும் சிலர் தயாராக இருப்பார்கள்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் அசுரன் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் வட சென்னை படத்தை விடவும் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

மண் சார்ந்த கிராமியக் கதையான அசுரன் படத்தின் போட்டியை மீறி சைரா தமிழில் சாதிக்குமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

Banner Content
Tags: ,

Related Article

No Related Article

0 Comments

Leave a Comment

HAPPY SUBSCRIBERS

Recent Upload

Advertisement

img advertisement

RECENTPOPULARTAG